அருள்மிகு தூவாயநாதர் திருக்கோவில் (பரவையுண்மண்டளி - திருவாரூர்)
God Name : தூவாயநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
துர்வாசர் வழிபட்ட லிங்கம் துர்வாச நாயினார் எனப் பெயர் கொண்டு பின் தூவாய நாயினார் என்றானது.
ஒரு காலத்தில் வருணன் இந்நகர் மீது அனுப்பிய கடலை வற்றச் செய்து உண்டமையால் இவ்வூர் பரவை உண் மண் தளி எனப் பெயர் கொண்டு பின்னர் பரவையுண்மண்டளி என்றானது. (பரவை - கடல்)
சங்கிலியாரை மணந்து சத்தியத்தை மீறி பிரிந்து சென்ற சுந்தரர், இழந்த இரு கண்களில் ஒன்றினை காஞ்சியில் பெற்றார். இவ்வாலயத்து குளத்தில் மூழ்கி எழுந்து இவ்விறைவனை வழிபட்டு பதிகம் பாடி மற்றொரு கண் பார்வையை சுந்தரர் பெற்றார் என ஸ்தல வரலாறு.
பரவையுண்மண்டளியின் பின்பக்கமாக திருநீலகண்ட நாயனார் கோவில் உள்ளது. பரவையார் வாழ்ந்த வீட்டில், செந்தாமரை நாறும் வீதியில் பரவை நாச்சியார் கோவில் ஒன்றும் இருக்கின்றது. அதனையடுத்து ராஜதுர்க்கை கோவில் உள்ளது.
மூலவர்: தூவாயநாதர், அம்பாள்: பஞ்சின் மெல்லடியாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தூவாயநாதர். ஸ்வாமியின் திருவுருவம் கண்ணாடி போல் பளபளப்பாக இருக்கின்றது. மண்டலேசன் என்ற பெயரும் உண்டு. பஞ்சின் மெல்லடியாள் அம்பிகை உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
அழகிய விநாயகரின் திருமேனி அருகே துர்வாசரின் திருவுருவம் காணப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.