அருள்மிகு மாற்றுரைத்த விநாயகர் திருக்கோயில் (திருவாரூர்)
God Name : மாற்றுரைத்த விநாயகப் பெருமான்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்திற்குப் பழமலைநாதரைத் தரிசிக்கச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானைப் பார்த்து, "திருப்பணிகளுக்காகப் பொருள் தேவைப்படுகிறதே. ஏதாவது கொடுத்து உதவக்கூடாதா?" என வேண்டுகிறார். பழமலைநாதரும் 12,000 பொற்காசுகளைத் தந்தார். "இவற்றை எப்படி எடுத்துச் செல்வேன்? வழியில் தொலைந்து போகலாம் அல்லது களவாடப்படலாம். எனக்குப் பயமாக இருக்கிறதே" என குழம்பினார் சுந்தரர். "மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூருக்குப் போய் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக்கொள்" எனப் பழமலைநாதர் யோசனை கூறினார். அவ்வாறே சுந்தரரும் செயல்பட்டார். திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தங்கரைக்குச் சென்று, படிக்கட்டில் நின்று பொற்காசுகளைத் தருமாறு வேண்டினார் சுந்தரர். எட்டுப் பதிகங்கள் பாடினார், பதில் ஒன்றுமில்லை. "இறைவன் சோதிக்கிறார் போலும்" என ஒன்பதாவது பதிகம் பாட ஆரம்பித்ததும், பொற்காசுகள் மிதந்து வந்தன. அவற்றை வாரியெடுத்துக்கொண்டு, இவ்விநாயகரின் துணையுடன், அவையனைத்தும் "சொக்கத் தங்கம்தானா" என்று உரைத்துப் பார்த்து ஒப்பிட்டார். இதனால், இந்தப் பிள்ளையாருக்கு மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயர் வந்தது. "மாத்தரிச்ச பிள்ளையார்" என்று உள்ளூர்க்காரர்கள் அழைக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் அழகிய திருமேனியுடன் அமர்ந்துள்ள விநாயகப் பெருமான் மிகுந்த வரப்பிரசாதி. ஒரு கையில் உரைகல்லும், மறுகையில் பொற்காசும் கொண்டவாறு தரிசனம் தருகின்றார். கமலாலயம் தென் கரையில் துர்வாசர் தவம் செய்த கோயிலும் உள்ளது. யக்ஞோஸ்வரர் கோயில் மேற்குக் கரையில் உள்ளது. 16 பட்டைகளுடன் கூடிய ஷோடச லிங்கமான கைலாசநாதரை இங்கு தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.