அருள்மிகு வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீவாஞ்சியம்)
God Name : ஸ்ரீ வாஞ்சிநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
ரிஷபாரூடராய் உலகை வலம் வந்து கொண்டிருந்த சிவபெருமான் இத்தலமருகே வந்ததும், ஸ்தலத்தின் சிறப்புகளை உமையவளுக்கு எடுத்துக் கூறினார். பிரளய காலத்தில் அழிவற்றது, 66 கோடி தலங்களுள் சிறந்தது, பஞ்சமா பாதகங்களையும் போக்க வல்லது, என்று மேலும் விளக்கினார். இதனால் அம்பிகை இத்தலத்தில் வசிக்க ஆசைப்பட்டாள். இதன் காரணமாக அம்பிகைக்கு வாழ வந்த நாயகி என்ற பெயர் வந்தது.
மாசி மாச சுக்ல பட்ச மக நட்சத்ர நாளில், சிவபெருமான் உமையவளோடு இங்கு எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மாசிமக உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடத்துகின்றனர்.
திருமாலுடன் ஏற்பட்ட ஊடலால் அவரை பிரிந்த மஹாலட்சுமி, பூலோகம் வந்து ப்ருகு முனிவரின் பெண்ணாக வளர்கிறார். திருமகளை தேடி அலைந்த திருமால் நாரதரின் யோசனைப்படி இத்தலத்திற்கு வந்து, சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான், ப்ருகு முனிவரின் ஆஸ்ரமம் சென்று, திருமகளை அழைத்து வந்து, திருமாலுக்கு மணம் முடித்து வைக்கின்றார்.
ஸ்ரீயை (லட்சுமியை) வாஞ்சித்து (விரும்பி) இவ்விறைவனை பூஜித்ததால், இவ்ஊருக்கு ஸ்ரீ வாஞ்சியம் என்ற பெயர் வந்தது. தூய தமிழில் திரு விழை ஆர் (அ) திருவாஞ்சியம் எனக் கூறுகின்றனர். ராஜ கம்பீர சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குப்தகங்கை குளத்தில் ஸ்நானம் செய்து, இவ்விறைவனை வழிபட்டால் காசிக்கு சென்று விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. யமதர்மராஜன் இங்கு இறைவனை வழிபட்ட காரணத்தால் இத்தலத்தில் யமவாதனை இல்லை என்பர். காசிக்கு வீசம் கூட என்ற பழமொழியே இத்தலத்தைப் பற்றி நிலவி வருகிறது.
உயிரை பறிக்கும் தொழிலை மேற்கொண்டதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள யமதர்மராஜன் இங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி (யம தீர்த்தம்) இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகின்றது. இங்கு யமன் வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் பாக்யத்தைப் பெற்றான். மாசி மக பெருவிழாவின் இரண்டாம் நாளன்று, ஸ்வாமி யம வாகனத்தில் புறப்பாடு.
குப்த கங்கையில் கங்கை ரஹஸ்யமாக வசிக்கின்றாள். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம்.
இத்தலத்தில் இறப்பவர்கள், வலது காதை மேற்புறமாக இருக்கும்படி கிடப்பார்கள் என்றும் சிவபெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
தேவாரத்திருத்தலம் - பூலோக கைலாசம்.
முதலில் குப்த கங்கையில் நீராடி, கங்கைக்கரை விநாயகரிடம் ஆசி பெற்று, பின் யமதர்மராஜனை தரிசித்து வழிபட்டு, அபயங்கர விக்னேஸ்வரரையும் பாலமுருகனையும் தரிசித்து, பின்னர் ஸ்வாமியையும், அம்பாளையும் தரிசிக்க வேண்டும்.
வெளிப் பிரகாரங்களுள் - 4வது பிரகாரம் கிரி வலப் பிரகாரம், 3வது கங்கை கரை பிரகாரம், 2வது பிரதோஷ பிரகாரம், முதலாவது உட்பிரகாரத்தில் சந்நிதிகள்.
ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள தனி சந்நிதியில், தென்திசை நோக்கி அமர்ந்த கோலத்தில், யமதர்மராஜன் தரிசனம் தருகின்றார். பாசம், சூலம், கதை கொண்ட நான்கு கரங்களுடனும், இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பாதக்குறடுகளுடனும் காட்சி தருகிறார். இவர் அனுக்ரஹ மூர்த்தியாகவும், க்ஷேத்ரபாலகராகவும் விளங்குகிறார். அருகே நின்ற திருக்கோலத்தில் சித்ரகுப்தர் தரிசனம் தருகின்றார்.
இடைநிலை கோபுரம் கடந்தால் காணப்படும் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாளை தரிசிக்கலாம். வாழ வந்த நாயகி எனப்படும் ஸ்ரீ மங்களாம்பிகா அழகான திருவுருவம். நின்ற திருக்கோலம். மாலை வேளைகளில் சரஸ்வதியாக தரிசிக்கப்படுகின்றாள். இவள் பெயரில் 103 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ் ஒன்றும் உண்டு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வாஞ்சிநாதர். சுயம்பு மூர்த்தம். உயரமான தடித்த பாணம் கொண்டு தேஜோமயமாக ஒளி வீசி கம்பீரமாக தரிசனம் தருகின்றார். வாஞ்சிலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு - மேற்கு ஆகிய இரு பக்கங்களிலிருந்தும் பூஜை செய்யலாம் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார். சந்தன இலையால் அர்ச்சிப்பது விசேஷம்.
உட்பிரகாரத்தில் வெள்ளை பிள்ளையாரை தரிசித்துவிட்டு அடுத்துள்ள மண்டபத்தில், மயில் மீதமர்ந்த ஆறுமுகன் வள்ளி - தெய்வயானையுடன் இடம் பெற்றிருப்பதை காணலாம். சட்டைநாதர், பிட்சாடனர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் ஆகியோரின் படிமங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
வயிற்றுவலி போக்கும் வெண்ணை பிள்ளையார் - வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவரிடம் பிரார்த்திக்கின்றனர். நோய் குணமானதும் இவரது திருமேனியில் வெண்ணை தடவுகின்றனர்.
பிரகாரத்தில் அகோரேஸ்வரர், பஞ்ச நாதேஸ்வரர், மயூரா நாதேஸ்வரர், மஹாலிங்கேஸ்வரர் ஆகிய பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம்.
வடக்கு பிரகாரத்திலுள்ள அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகுந்த வரபிரசாதி. மகிஷாசுரன் தலை மீது ஒரு காலை வைத்து, எட்டுக்கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கி, அழகே உருவாக தரிசனம் தருகின்றாள்.
மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ள யோக பைரவர் விசேஷ மூர்த்தியாக உள்ளார். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர வடைமாலை சாத்துகின்றனர். ஒரே சிற்பமாக இணைத்து வடிக்கப்பட்டுள்ள ராஹு - கேது அற்புதமாக உள்ளது. இந்த அமைப்பை சண்டராகு என்பர். விமானத்தில் காணப்படும் சுதைச் சிற்பங்கள் அனைத்தும் பேரெழில் கொண்டவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.