அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் (முடிகொண்டான்)

God Name : ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார் பரத்வாஜ முனிவர். லங்கேசனை வதம் செய்து விட்டு திரும்பும் வழியில், ஏற்கனவே கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில், பரத்வாஜரின் ஆஸ்ரமத்திற்கு வருகிறார் ஸ்ரீ ராமர். அவரை எதிர் கொண்டழைத்த முனிவர் தமது குடிலில் ஒரு நாளாவது தங்கி விருந்துண்ண வேண்டினார். தனது குலதெய்வமான அரங்கனை வணங்காது உணவருந்தேன் என்கிறார் ராமர். காட்டிலே காய்கனிகளை மட்டுமே புசித்த ராமனுக்கு அன்னம் சாப்பிட முடியாமல் போய் விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் முனிவர், தமது தவ வலிமையால் அயோத்தியிலிருந்து அரங்கனை இங்கு வரவழைத்தார். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு பூஜித்தபின் அமுதுண்கிறார் ராமர் என ஸ்தல வரலாறு. அயோத்தியில் தீக்குளிக்க ஆயத்தமான பரதனுக்கு தனது வருகையை தெரிவிக்க ஹனுமனை அனுப்பி விடுகிறார் ஸ்ரீ ராமர். பரதனுக்கு செய்தியை தெரிவிக்க சென்ற ஹனுமன் ஜெய மாருதியாக குளக்கரையில் எழுந்தருளியுள்ளார். ராஜேந்திர சோழனுக்கு - முடி கொண்ட சோழன் என்ற பட்டப் பெயரும் உண்டு. அவனது பெயரைக் கொண்டே இவ்வூரை முடிகொண்டான் என்றழைக்கின்றனர். இவ்வூரில் ஓடும் ஆற்றின் பெயரும் முடிகொண்டான் ஆறு என்றே அழைக்கின்றனர். பரத்வாஜ முனிவர்க்கு ஸ்ரீ ராமர் தனது முடி (கிரீடம்) தரிசனம் தந்ததால் முடிகொண்டான் என இவ்வூர் பெயர் கொண்டதாகவும் கூறுவர். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர். 2000 வருஷங்கள் பழமையான கோவில் என்பர். ஸ்ரீ அயோத்தி ரங்கநாதர், பரத்வாஜருக்காக ஆவிர்பவித்த ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி அழகிய சிலா வடிவமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இடக்கையில் கோதண்டம் ஊன்றியும் வலக் கையில் கணையினைக் கொண்டும் ஒய்யாரமாக நின்ற திருக்கோலம். சீதா பிராட்டியும் லட்சுமணனும் உடன் உள்ளனர். செப்பு வடிவங்களாக தரிசனம் தரும் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ கோதண்டராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் ஆகியோரைக் காணலாம். கோதண்டத்தை லாகவமாக பிடித்து நிற்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். நீண்டு உயர்ந்த மூன்று தள விமானம் தாமரை மலர் போல் விரிந்து காணப்படுகின்றது. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு சயனித்துள்ள ஸ்ரீ ரங்கநாதரை சேவிக்கலாம். வலது கையை மடித்து தலையில் வைத்துக் கொண்டு, இடது கை தொடை வரை நீட்டி சயனித்துள்ளார். பால சயனம் என்று கூறுவார்கள். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களும், பிரம்மாவும் பின்புறமாக உள்ளனர். பரத்வாஜ முனிவர் கை கூப்பியபடி நின்ற கோலத்தில் காணப்படுகின்றார். வைகுந்த ஏகாதேசியன்று ஸ்ரீ ராமர் சந்நிதியில் அகண்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.