அருள்மிகு மாகாளநாதர் திருக்கோவில் (அம்பர் மாகாளம் - கோவில் மாகாளம்)
God Name : மாகாளநாதர் எனப்படும் காளகண்டேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மதலோலை என்பவளின் ராட்சஸ புத்திரர்களான அம்பன், அம்பரன் ஆகிய இருவரும் இத்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை வழிபட்டு, இறவா வரம் பெற்றவர்கள். இதனால் கர்வம் மிகுந்து, அனைவரையும் துன்புறுத்தி வந்தனர்.
அவர்களை அழிக்கப் புறப்பட்ட மாகாளி அழகான மோகினி வடிவம் கொண்டாள். அவளுக்குத் துணையாக வயோதிக வடிவத்தில் திருமால் சென்றார். இருவருமாக ராட்சஸர்கள் எதிரே போய் நின்றனர்.
மோகினி மீது ஆசை கொண்ட அம்பன், அம்பரன் இருவரும் வயோதிகரிடம் சென்று, அந்தப் பெண்ணை மணம் முடித்துத் தருமாறு வேண்டினர். "உங்களில் ஒருவர் மணம் செய்து கொள்ளலாம். யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார் பெரியவர்.
இருவரும் பலப்பரிட்சையில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதினர். இந்தச் சண்டையில் அம்பாசுரன் அம்பனைக் கொன்றான். உடனே காளி தேவி மோகினி வடிவம் விடுத்து காளி உருக் கொண்டு அம்பாசுரனை வதம் செய்தாள். அம்பாசுரனை வதைத்த தோஷம் நீங்க மாகாளரை வழிபட்டாள் காளி என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சுந்தரரின் வேண்டுகோளின்படி சோமாசி மாற நாயனாருக்கு அருள் புரிய நீச வடிவினராய் வந்தார் இறைவன் என ஸ்தல வரலாறு.
அசுரர்களைக் கொன்ற தோஷம் நீங்க இத்தலத்தில் இவ்விறைவனைப் பூஜித்தாள் என ஸ்தல வரலாறு.
மஹாகாள ரிஷி பூஜித்த ஸ்தலம் என்பதால் மாகாளம் எனப் பெயர் கொண்டது.
மூலவர்: மாகாளநாதர். அம்பாள்: அச்சம் தவிர்த்த நாயகி எனப்படும் பயக்ஷய நாயகி.
மூலஸ்தானத்தில் மாகாளநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். திருமேனி சிறியதானாலும் தேஜோமயமாக அழகாக இருக்கின்றது. மூன்று பாகங்களாகப் பிரிந்து இருக்கும் லிங்கத்தைச் செம்புப் பட்டயத்தால் கட்டி ஆராதிக்கின்றனர். மூன்று திருமுகங்களாகக் கருதப்படுகிறது.
இவருக்குக் காளகண்டேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. காளம் என்றால் நாகம். நாக கன்னிகை பூஜித்ததாலும், மாகாளி பூஜித்ததாலும் ஸ்வாமிக்கு மாகாளநாதர் என்ற பெயர் வந்தது.
தெற்குப் பக்கமாகத் தனிக் கோவில் கொண்டு தரிசனம் தரும் அம்பிகை பயக்ஷய நாயகி எனப்படும் அச்சம் தவிர்த்த நாயகி அழகே உருவானவள், மிகுந்த வரப்பிரசாதி. ஷோடஸ கௌரிகளுள் அசோக கௌரி எனப் போற்றப்படுபவள்.
அதிகாரநந்தி கோபுரத்தைக் கடந்து மஹா மண்டபம் சென்றால் நாகநாதர் - நாக கன்னிகையைத் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். வடக்குப்புறமாகக் காட்சி கொடுத்த நாயகர் தரிசனம் தருகின்றார். வலக்கால் ஊன்றி, இடக்கால் மடித்து, ரிஷபத்தின் மீது இடக்கை வைத்து, சற்று சாய்ந்தாற்போல் நிற்கும் அழகுடன் விளங்கும் இவர், சோமாசி மாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த கோலத்தில் காணப்படுகின்றார்.
இவருக்கு எதிரே சோமாசி மாற நாயனார் தமது மனைவியுடன் நிற்கின்றார். பரவை நாச்சியாருடன் சுந்தரர் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
தெற்குப் பக்கமாகத் தியாகேசர் தனி சந்நிதி கொண்டுள்ளார். சோமாசி மாறரின் வேள்விக்கு வந்து பறை கொட்டும் பாணியில் வந்த அதே கோலத்தில் காணப்படுகின்றார்.
வலச்சுற்றில் பரிவார கணபதி, தனுசு சுப்ரமண்யர் எனப்படும் சிங்கார வேலர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். சதுர்புஜங்களுடனும், வில்லை ஊன்றிய கோலத்திலும், மயிலோடும் நிற்கும் தனுசுவேலரின் எழில் கோலம் மனசை விட்டு அகலாதது.
வெளிப்ரகாரத்தில் காளி தேவி கோவில் கொண்டுள்ளார். அம்பாசுரனை வதைத்த தோஷம் நீங்க மாகாளரை வழிபட்டவள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.