அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோவில் (அச்சிறுப்பாக்கம்)

God Name : ஆட்சீஸ்வரர்

காஞ்சி கைலாசநாதர் கோவில்

திருவாரூர்

Call : +91-

திரிபுர தகனம் செய்ய, சிவபெருமான் தேரில் புறப்பட்டபோது, தேவர்கள் - விநாயகப் பெருமானை வழிபட்டு உத்தரவு பெற மறந்து விட்டதால், விநாயகரின் தேரின் அச்சினை முறித்து விட்டார். இதை தெரிந்துக் கொண்ட சிவபெருமான் ஒரு காரியத்தைத் தொடங்கும்போது, விநாயகரை வணங்கி விட்டுத்தான் தொடங்க வேண்டும் என ஆணையிட்ட நாமே அதை மறக்கலாகாது என எடுத்துரைத்து, மஞ்சள் பிள்ளையாரை ஒன்றினை பிடித்து வைத்து, வழிபட்டு, பின்னர் தேரேறி புறப்பட்டார் என ஸ்தல வரலாறு. அச்சு - இறு - பாகம் என்பதே அச்சிறுப்பாக்கம் என்றானது. பாண்டிய மன்னன் ஒருவன் இத்தலமருகே பயணித்துக் கொண்டிருந்த போது அவனது தேரின் அச்சு முறிந்து நின்றுவிட்டது. உடன் வந்தவர்கள் பழுதுபார்த்துக் கொண்டிருக்கையில், பொன் உடும்பு ஒன்று வேகமாக ஒடிச் சென்று கொன்றை மரத்தடியில் புகுந்து கொண்டதை கவனித்தான். மரத்தை வெட்டக் கட்டளையிட்டான். அப்படியும்உடும்பு தென்படவில்லை ஆனால் ரத்தம் பீறிட்டது. இறைவனின் திருவிளையாடல் என எண்ணி அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் நடந்ததை விளக்கினான். திரிநேத்ரதாரி முனிவரின் உதவியுடன் கோவிலை கட்டினான் என ஸ்தல வரலாறு. தேவாரத்திருத்தலம்

மூலவர்: ஆட்சீஸ்வரர், அம்பாள்: இளங்கிளியம்மை, மூலவர்: உமையாட்சீஸ்வரர், அம்பாள்: உமையாம்பிகை பிரதான ஆலயம் போகும் வழியில் கோவில் கொண்டுள்ள ஸ்தல விநாயகரான அச்சு முறித்த விநாயகர்; மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். முதலில் இவரை வணங்கி ஆசி பெற்று, சிதறு தேங்காய் உடைத்து, பிரார்த்தனை செய்து கொண்டு மூலவரை தரிசிக்க செல்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஆட்சீஸ்வரர். சதுர ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. சுயம்பு லிங்கம். திரிநேத்ரதாரி முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கம். அகஸ்திய மாமுனி பூஜித்த லிங்கம். கிழக்கு பாரத்த சந்நிதி. அம்பாள் இளங்கிளியம்மை எனப்படும் பாலசுகாம்பிகா அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். தெற்கு பாரத்த சந்நிதி. உட்பிரகாரத்திலுள்ள பிரதான கருவறையில் மற்றொரு மூலவரான உமையாட்சீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. பின்புறமாக சிவ-பார்வதி திருமணக் கோலக் காட்சி. அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காண்பித்தவர். அரசனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். புலஸ்தியர் பூஜித்த லிங்கம். உமையாம்பிகை எனப்படும் மெல்லியளாலும் உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்துள்ள நந்தி வித்யாசமான அழகு. திரிநேத்ரதாரி முனிவரின் ஜீவ சமாதி, நந்தியம் பெருமானுக்கு கீழே இருப்பதாக கூறுகின்றனர். அடுத்து ஸ்ரீ நிவாசப் பெருமாள் ஆவுடை மீது நின்ற திருக்கோலத்தில் சேவை

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.