அருள்மிகு சுயம்புநாதஸ்வாமி திருக்கோவில் (பேரளம்)

God Name : சுயம்புநாதர் எனப்படும் நாமாஸ்திகேசன்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

கார்ஷணாஜினி எனும் முனிவர் உலகிலுள்ள எல்லா லிங்க மூர்த்தங்களின் திருநாமங்களைச் சொல்லி வழிபட விரும்பி இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். ஆலயத்து சுவரில் எல்லா லிங்கங்களின் பெயர்களும் அவர் கண்ணுக்குத் தெரியும்படி இறைவன் வரமளித்தார். எல்லா பெயர்களின் இருப்பிடமாக விளங்கியதால் பேர் - அளம் - பேரளம் என்றானது. எல்லா ஸ்தலங்களுடைய அருள்தன்மை இங்கு இருப்பதால் இவ்வூரை சமஷ்டி க்ஷேத்ரம் என்று கூறுவர். ஒரு முறத்தில் திருநீற்றைத் தெளித்து நாமாஸ்திகேசன் என்று எழுதி, கேதார் எனும் மந்திரத்தை ஜபித்து நோயாளிகளுக்கு அளித்தால் நல்ல பலன் கிடைப்பதாக கூறுகின்றனர்.
மூலவர்: சுயம்புநாதர் எனப்படும் நாமாஸ்திகேசன். அம்பாள்: சுயம்பேச்வரி எனப்படும் பவானி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுயம்புநாதர். உலகிலுள்ள எல்லா லிங்க மூர்த்தங்களும் இந்த லிங்கத்திருமேனியில் இருப்பதால் மூலவர் சற்று வடக்கு பார்த்து சாய்ந்துள்ளார். வடமொழியில் நாமாஸ்திகேசன் என்ற திருநாமம். அம்பாள் சுயம்பேச்வரி எனப்படும் பவானி மிகுந்த வரபிரசாதி. கோஷ்ட மூர்த்தங்களும் பிரகார சுற்றிலுள்ள மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன. பேரள முனிவரின் திருவுருவத்தை தரிசிக்கலாம். விமானத்திலுள்ள சுதை சிற்பங்களும் வீணா தட்சிணாமூர்த்தி சிற்பமும் அழகாக இருக்கின்றன. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தக் கிணறு இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.