அருள்மிகு ஜெயம் கொண்டேஸ்வரர் திருக்கோவில் (பில்லூர்)
God Name : ஸ்ரீ ஜெயம் கொண்டேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
செல்லத்தம்மா என்பவர் 300 வேலி நிலம், பெரிய ஜமீன், ரோஜா தோட்டங்கள், பெரிய குளம் என்று ஏகபோகமாக ஆண்டு வந்தார். இப்போது சொத்துக்கள் தொலைந்து, மீதமுள்ளவற்றை ரவி என்பவர் பராமரிக்கின்றார். அதில் சிலவற்றை காஞ்சி மடத்திற்கு கொடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ ஜெயம் கொண்டேஸ்வரர் மற்றும் அம்பாள்: ஸ்ரீ ஜெயாம்பாள்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஜெயம் கொண்டேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். பெரிய ஆவுடையாரும், பெரிய பாணமும் கொண்டு கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய லிங்கம்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ ஜெயாம்பாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். எந்தக் காரியத்திலும் ஜெயத்தைப் பெற்றுத் தரும் காரியசித்தி கருணா நாயகியாக இருப்பதால் ஸ்ரீ ஜெயாம்பாள் எனப் பெயர் பெற்றாள்.
கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. ஈஸ்வரனின் இடது புறமாக சந்நிதி கொண்டுள்ள சனி பகவான் சிறப்பு மூர்த்தமாக வணங்கப்படுகின்றார். சுதைச் சிற்பங்கள் யாவும் பழுதடைந்துள்ளன. இக்கோவில் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.