அருள்மிகு க்ருபா சமுத்ரப் பெருமாள் திருக்கோவில் (திருச்சிறுபுலியூர்)
God Name : மூலவர்: அருள்மாகடல் பெருமாள்் உற்சவர்: க்ருபா சமுத்ரப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
கருடனிடம் கொண்ட பகை நீங்க ஆதிசேஷன் தவம் இருந்த இடம். பதஞ்சலி முனிவர் வழிபட்டு பூஜித்த ஸ்தலம்.
வியாக்ரபாதருக்கு பால சயனத்தில் இளமைக் கோலத்தில் மூலவர் தரிசனம் தந்தார் என்பதால் திருவுருவம் சிறியதாக உள்ளது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: அருள்மாகடல் பெருமாள்் உற்சவர்: க்ருபா சமுத்ரப் பெருமாள்.
தாயார்: திருமாமகள் நாச்சியார்் உற்சவத் தாயார்: ஸ்ரீ தயா நாயகி.
மூலஸ்தானத்தில் மூலவரான அருள்மாகடல் பெருமாள் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு, புஜங்க சயனமாக கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கண்வர், வியாக்ரபாதர் ஆகியோரின் திருவுருவங்களை மூலவரின் திருவடிகளருகே காணலாம்.
உற்சவர் க்ருபா சமுத்ரப் பெருமாள் சங்கு-சக்கரம், வில், கதை ஆகியன கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார்.
தாயார் திருமாமகள் நாச்சியார் மூலவராகவும், ஸ்ரீ தயா நாயகி உற்சவத் தாயாராகவும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.