அருள்மிகு கமல வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (அரசர்கோவில்)

God Name :

ரங்கசாமி உச்சி மற்றும் கோவில்

Tiruvarur

Call : +91-

அரசனும், ஆண்டவனும் ஒரு சேரக் காட்சி தந்தால், ப்ரம்மாவின் தோஷம் விலகும் என விதி. அரசனான ஜனகன் இங்கு இறைவனைத் தேடிவர, பெருமானும் மனமிசைந்து காட்சிதர, ப்ரம்மாவின் தோஷம் விலகியதாக, ஸ்தல வரலாறு. ஜனகன் வந்ததால் இவ்வூர் அரசர் கோவில் எனப் பெயருற்றது. இத்தலத்திலுள்ள ஸ்தல விருட்சத்தின் கீழமர்ந்து ப்ரம்மன் யாகம் செய்ததாக ஸ்தல வரலாறு. காஞ்சிபுரத்தில் செய்யவிருந்த யாகத்தின் ஹோமகுண்டத்திற்கு, இங்குள்ள பாலாற்றின் மண்ணை, ப்ரம்மன் எடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

மூலவர்: ஸ்ரீ கமல வரதராஜப் பெருமாள், தாயார்: ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மி மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கமல வரதராஜப் பெருமாள் மேற்கு பாரத்த சன்னதியில், நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி - பு தேவி தேவியர்கள் சமேதராக சேவை சாதிக்கின்றார். உத்ஸவ மூர்த்தி ஸ்ரீ வரதராஜர் மற்றும் இதர உத்ஸவ மூர்த்தங்கள் அனைத்தும் எழில் கொண்டவை. மூலவரும் உற்சவப் பெருமாளின் வலதுகை இடுக்கில் ஒரு தாமரை மொக்கு இருக்கும். மூலவருக்கு எதிரே அஷ்ட நாகங்களை அணிந்த கருடாழ்வார் தரிசனம் தருகிறார். தன கடாட்ச கருடன் எனப் போற்றப்படுகிறான். தாயார் ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மி பத்மாசனம் கொண்டு, கமலத்தில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படுகின்றார். மேற்கரங்களில் தாமரை மலர்க்களும் கீழ்க்கரங்களில் அபய-வரத முத்திரைகள் கொண்டும் தரிசனம் தருகின்றார். கிழக்கு பாரத்த சன்னதி. தாயார் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது அதிசயம். ஆறு எனும் எண் சுக்ரனுக்குரியது. சுக்ரனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த ஆதிமூல மஹாலக்ஷ்மியை சுக்ரன் வெள்ளிக்கிழமைதோறும் தொழுகிறான். எனவே இங்கே லக்ஷ்மியை வழிபடுவோருக்கு குபேர சம்பத் கடாட்சம் கிடைக்கும் என ஐதீகம். லக்ஷ்மி கணபதி, ஆபத்சகாய ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். முதலில் தாயாரை சேவிக்க வேண்டும் என்பது இங்கு சம்ப்ரதாயமாக உள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.