அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா - ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவில் (பம்மல்)
God Name : ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் ஸ்ரீ குருவாயூரப்பன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
சபரிமலை தந்திரியின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்ட திருவுருவம். சபரிமலையில் இருப்பது போலவே
கர்ப்பக்கிரஹமும் அமைந்துள்ளதால் நல்ல ஆகர்ஷண சக்தி வெளிப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கேரளாவிலிருந்து பணிக்கர்களை வரவழைத்து பிரசன்னம் பார்த்ததில், இக்கோவில் மலையடிவாரத்தில்
அமையும் என்று சொன்னார்களாம். மேலும் பிரசன்னத்தின் மூலமாக சிவன்மலைக்கும் திருநீர் மலைக்கும்
இடையே அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டதாம். அதன்படியே சங்கர் நகரில் அமைந்தது தெய்வ சங்கல்பம்
என்கின்றனர்.
திருப்புணித்துறையைச் சேர்ந்த ஆர்யன் நம்பூதிரியைக் கொண்டு ஆகம முறைப்படி பிரதிஷ்டைகளைச்
செய்துள்ளதாகக் குறிப்பொன்று கூறுகிறது.
சங்கடஹர சதுர்த்தி பூஜை, கணபதி ஹோமம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பகவதி சேவை
மற்றும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம்,
நீராஞ்சனம், ஜலதாரை, நெய்விளக்கு ஆகியனவும் ஹோமங்களும், ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில்
அன்னப்பிராசனம் மற்றும் துலாபாரம் ஆகியனவும், மாதாந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று
ஸ்ரீ நாகராஜாவிற்குப் பாலபிஷேகமும் செய்கின்றனர்.
ஆலயத்துள் நுழைந்ததும் இடம்புரி விநாயகரை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டு வலச்சுற்றை ஆரம்பிக்கின்றோம்.
மிகப் பெரிய அழகான திருமேனியைக் கொண்டுள்ளார் இடம்புரி விநாயகர். மிகுந்த வரப்பிரசாதி என்பர்.
சிவலிங்க வடிவினராக மரகதலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரதான சந்நிதியில் ஸ்ரீ தர்ம சாஸ்தா மூலவராக எழுந்தருளி அருள்புரிகின்றார். அழகான பஞ்சலோக விக்ரஹம்.
கல்யாண சுந்தர சாஸ்தா எனப் போற்றுகின்றனர்.
கருப்பசாமி, கருப்பாயி அம்மா, பெரிய கடுத்தசாமி ஆகிய காவல் தெய்வங்களை ஆலய நுழைவாசலருகே
இடம் வலமாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கோவிலின் வலது பகுதியில் ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதி கொண்டுள்ளார். வட்ட வடிவமான சந்நிதி.
ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியையும் சேவிக்கலாம். ஸ்ரீ பாலசுப்ரமண்யர் அழகாக இருக்கிறார்.
அஷ்டபுஜ துர்க்கையே மாளிகாபுரத்தம்மனாக எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்து இருப்பது விசேஷம்
என்கின்றனர்.
கேரளத்து மன்னார்சாலை சர்ப்பகாவு போலவே ஸ்ரீ நாகராஜாவை கேரளத்து தந்திரிகள் இங்கு பிரதிஷ்டை
செய்துள்ளனர். வேம்பு-வில்வ-அரசு விருட்சத்தினடியில் ஸ்ரீ நாகராணி சகிதம் இடம் பெற்றுள்ள
ஸ்ரீ நாகராஜா நாக தோஷங்களைப் போக்க வல்லவர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.