அருள்மிகு குழகர் கோவில் (திருக்கோடியக்கரை)

God Name : அமிர்தகடேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

வாயு பகவான் அமிர்த கலசத்தை எடுத்துச் செல்லும் போது, அதை தவற விட்டார். இத்தலத்து முருகப் பெருமான் அதை தாங்கிப் பிடித்து, தேவர்களிடம் அளித்ததாக வரலாறு. கீழே சிதறிய அமிர்தம் சிவலிங்கமாயிற்று. இதனால் இறைவனுக்கு அமிர்தகடேஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. உத்தராயண - தட்சிணாயண காலங்களில் சமுத்ர ஸ்நானம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது.
அமிர்த விநாயகரை வணங்கி ஆசி பெற்று ஆலயத்துள் செல்கின்றனர். மூலஸ்தானத்தில், மூலவரான அமிர்தகடேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு லிங்க மூர்த்தம். அன்னை மையார் தடங்கண்ணி உடன் எழுந்தருளியுள்ளார். அமிர்த விநாயகரை தரிசித்து ஆசி பெற்ற பிறகு, அடுத்துள்ள சந்நிதியில் அமிர்த சுப்ரமண்யரை தரிசிக்கலாம். இவர் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு தரிசனம் தருகின்றார். ஒரு கரத்தில் அமிர்த கலசம் ஏந்தியுள்ளார். இரு புறமும் வள்ளி-தெய்வயானை தேவியர்கள் காட்சி தருகின்றனர். மயில் வாகனம் வடக்கு நோக்கி உள்ளது. அமிர்த தீர்த்தம் என்கிற கிணறு பிரகாரத்திலுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.