அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (திருமலைவையாவூர்)
God Name : ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், உத்சவர; - ஸ்ரீ வைகுண்டம் கண்ணபிரான்
வெங்கடாசலபதி கோவில்
திருவாரூர்
Call : +91-
பிருகு முனிவர்; சௌபாக்ய மஹாயாகம் முடித்து, அதன் ஹவிர்;பாகத்தை கொடுப்பதற்காக வைகுண்டம் செல்கிறார்;. ஸ்ரீஹரியோ மெய்மறந்து தூங்கும்பாவனையில், திருவிளையாடல் புரிகிறார்;. கோபமுற்ற முனிவர்; விஷ்ணுவை மார்பில் உதைக்கிறார்;. இதனால் வருத்தமுற்ற மஹாலஷ்மி, புமிக்கு வந்து, தவத்தில் ஆழ்ந்துவிடுகிறாள்;. வராஹ அவதாரம்; எடுக்க வேண்டியதை நினைவுபடுத்துவதே, முனிவரின் அச்செயல், என விளக்குகிறான்; பகவான்.. பின்னர்; மஹாலஷ்மி சமேதராக, ஆதிவராஹ மூர்த்தியாக, பிருகு முனிவருக்கு தரிசனம் தந்தார்; என ஸ்தல வரலாறு. ஸ்ரீ வராஹராக காட்சி தந்த பெருமாள் தான் புலோகத்திலேயே தங்கி மக்களை ரட்சிப்பதற்காக தேவபர்வதத்தை புமிக்கு கொண்டு வா என கருடனிடம் பணித்தார்;. கருடாழ்வாரும் பர்வதத்தை எடுத்துக் கொண்டு பறந்து வரும்போது, அது இரண்டு துண்டுகளாக பிளந்து ஒரு துண்டு கீழே விழுந்தது. மற்ற பகுதியை கருடன் புமியில் ஓரிடத்தில் வைக்கிறான்;. அதில் கோவில் கொண்டு பக்தர்களை ரட்சிக்கின்றார்; திருமால். அதுவே திருமலை-திருப்பதி ஆகும். விஜயநகர அரசன் ராஜா தோடர்மால் சிறந்த விஷ்ணு பக்தன். திருமலை-திருப்பதிக்கு திருப்பணிகள் செய்து கொண்டிருப்பவன். பர்வதத்தின் மற்றொரு பகுதி கீழே விழுந்தது அல்லவா? அது விழுந்த இடத்தை அரசனுக்கு சுட்டிக் காட்டி, அங்கே கோவில் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பணித்தாராம் திருமால். அதன்படி ராஜா தோடர்மால் எழுப்பிய கோவில் இது. இத்தலத்தின் மீது பறக்கும்போது, சஞ்சீவி மலையை புமியில் வைக்காமல் தனது வலது கரத்திலிருந்து
மலையடிவாரம்: மலையடிவாரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்; மிகுந்த வரபிரசாதி. வாலை சுருட்டி சிரஸின்மீது வைத்துக் கொண்டும், கையில் தாமரை மலர்; ஏந்தியபடியும், ஆனந்த நடனம் புரியும் கோலம். சேவார்த்திகள் தங்களது பிரார்த்தனைகளை எழுதி கொப்பரையுடன் துணியில் கட்டி, ஆலயத்தில் கட்டுகிறார்கள். புத்ர பாக்யம் வேண்டுபவர்கள் இங்கு தரும் குங்குமப்பு பிரசாதத்தை 48 நாட்கள் உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்று பட்டாச்சாரியர் தெரிவிக்கின்றார். இவ்வாலயத்தின் அருகே அரசு-வேம்பு-வில்வம் மூன்றும் இணைந்த விருட்சம் உள்ளது. விருட்சத்தினடியே நாகப் பிரதிஷ்டைகள். அதனடுவே சந்தான கோபாலன் விக்ரஹம். மலையடிவாரத்தில் வராஹ புஷ்கரணி மலை: மூலவர்: ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள், உத்ஸவர்: ஸ்ரீ வைகுண்டம் கண்ணபிரான், தாயார்: ஸ்ரீ அலர்மேல் மங்கா தக்ஷிண சேஷகிரி, தக்ஷிண கருடகிரி, தக்ஷிண வேங்கடகிரி, வராஹ க்ஷேத்ரம், தென் திருப்பதி என்றெல்லாம் போற்றப்படும் இந்த ஷேத்ரம், 545 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. சுமாரு 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.. வாகனங்கள் செல்லும் பாதையும் உள்ளது. முதலில் ஆதிமூர்த்தியான் ஸ்ரீ வராஹப் பெருமானை சேவிக்க வேண்டும். மஹாலஷ்மியுடன் ஆதி வராஹர், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு எழுந்தருளியுள்ளார். சீதாப்பிராட்டியுடன் தரிசனம் தரும் ஸ்ரீராமர், ராதா - ருக்மணியுடன் காட்சி தரும் ஸ்ரீ வேணுகோபாலன் என ஸ்ரீமன் ந

Opening Time
05.30 AM

Closing Time
07.00 PM

Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.