பெரிய மறவர் என்பவரால் கட்டப்பட்ட கோவில் என்பதால் காத மறவர் காளி என்ற பெயர் கொண்டாள்.
நேர்த்திக் கடனாக வேண்டிக் கொள்ளும் ஊர் மக்கள் நிறைய காளி சிலைகளை மண்ணால் செய்து கொண்டு வந்து வைக்கின்றனர். புடவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், காணிக்கையாக வந்த புடவைகளின் நுனியைக் கிழித்து, சந்நிதி முன்பாக உள்ள மரத்தில் கட்டி வேண்டிக் கொள்வார்கள். குழந்தை பிறந்ததும், மரத்தொட்டில் ஒன்றைக் கட்டி இந்த துணியை அதில் வைத்து விடுவார்கள் என கூறப்படுகிறது.