கடம்பவனேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்த பக்தர் ஒருவரை நாகம் தீண்டிவிட்டது. உயிர் பிரியும் நிலையில் இவ்விறைவனைப் பார்த்து கண்ணீர் மல்க வேண்டினார். விஷம் இறங்கி பிழைத்துக் கொண்டார். இதனால் இவ்விறைவன் விஷமங்களேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இத்தலத்தில் விஷ ஜந்துக்கள் எதுவும் கடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் வழிபட்ட ஸ்தலம். சகாதேவன் இங்கு சூரியனை வழிபட்டுள்ளான். இவ்விறைவனை வழிபட்டால் ஜோதிட ஞானம் கிடைக்கும். துரியோதனின் மனைவி பானுமதி வழிபட்ட ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம்.