ரூபம் என்றால் உருவம்் விரூபம் என்றால் இயல்புக்கு மாறானது எனப் பொருள். அக்ஷம் என்றால் கண்கள்.
இயல்புக்கு மாறாக இவ்விறைவன் மூன்று கண்களுடன் இருப்பதால் விருப்பாக்ஷீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.
பழைய கல்வெட்டுக்கள் நிறைந்த புராதனக் கோவில். புனரமைப்பு பணிக்காக தோண்டியபோது கிடைத்த நடராஜர் சிலையை உற்சவ மூர்த்தியாக சிறப்பித்து பூஜித்து வந்துள்ளனர்.
ஞானசம்பந்தப் பெருமான் எலும்பை பூம்பாவையாக்கிய ஸ்தலம். உயிர்ப்பிக்கப்பட்ட பூம்பாவையின் தந்தை சிவநேச செட்டியார் நிர்வகித்த கோவில் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
சப்த (ருத்ர) ஸ்தானங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.