திருவீழிமழலைப் பெருமானிடம் சக்ராயுதம் பெற்ற விஷ்ணு இவ்விறைவனை வழிபட்டுள்ளார். விக்ரம சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்தமையால் இவ்விறைவன் விக்ரம சோழேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
விக்ரம சோழன் அவ்வையாரிடம் ஒரு சுரைக்காயைத் தந்து, அதில் ஒரு பாதியை கறி சமைத்துக் கொண்டு வந்து திருவீழிமழலை அபிஷேகத்தின்போது நைவேத்தியம் செய்யும்படியும், மீதி பாதியை விதைக்காக விட்டு வைக்கும்படியும் கூறினான் என்று கூறப்படுகிறது. இதனால் இவ்வூர் திருசுரக்கை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலில் மூலவராக வரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சீதா தேவி, லக்ஷ்மணன், ஹனுமன் சமேத ஸ்ரீ ராமர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். அய்யனார் கோயில் ஒன்றும் உள்ளது.