குங்குமம் தயாரிப்பதற்கு தேவையான அளவு மஞ்சள் இங்கு காடாக வளர்ந்திருந்தமையால் இவ்வூருக்கு மஞ்சக்கொல்லை எனப் பெயர் வந்தது.
பிரம்மா திலோத்தமையிடம் ஆசை கொண்டார். 'என்னை படைத்தவராகிய நீங்களே என்னிடம் தகாது நடந்துகொள்ளலாகாது' என திலோத்தமை உபதேசம் செய்கின்றாள். இதனால் கோபமுற்ற பிரம்மா, அவளை ஒரு தாசியாக இருந்து பூலோகத்தில் கஷ்டப்படுமாறு சபிக்கிறார். பூலோகத்தில் தாசியாக வாழ்ந்து வந்த திலோத்தமை, ஒரு பிராமணரின் சாபத்தால், அழகை இழக்க நேரிடுகிறது.
சாப விமோசனம் வேண்டி, பல ஸ்தலங்களுக்கு சென்று வந்த திலோத்தமை, இத்தலம் வந்து இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி, ஞான லிங்கரை வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்று, பழையபடி அழகான உருவம் பெற்று மேலுலகம் சென்றாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் வழியே முருகனை தோற்றுவித்தார். இந்த நிகழ்வைக் கண்டு அஞ்சி ஓடினாள் பார்வதி தேவி. ஓடும்போது அவளது கால் சிலம்புகளிலிருந்து தெறித்து சிதறிய நவமணிகளே - நவவீரர்களாக உருப்பெற்றனர் என்பர்.
(மாணிக்கம் - வீரபாகுத் தேவர், முத்து - வீர கேசரி, புஷ்பராகம் - வீர மஹேந்திரர், கோமேதகம் - வீர மகேஸ்வரர், வைடூர்யம் - வீர புரந்தரர், மரகதம் - வீர மார்த்தாண்டர், பவளம் - வீராந்தகர், நீலம் - வீர தீரர்.)
கோமல் சுப்ரமண்ய அய்யரின் பார்யாள் திருமதி. ராஜலட்சுமியின் குலதெய்வம் மற்றும் வழிபாட்டு ஸ்தலம் இது.
இவ்வூர் அக்ரஹாரத்தில் அஷ்ட பந்தனம் தயாரித்து கோவில்களுக்கு அனுப்புகின்றனர்.