மகாபலி மன்னன் செய்யும் வேள்வியில் தானம் பெற வந்த திருமால், தானமாக மூன்றடி மண் கேட்டார். அவர் கேட்ட தானத்தைத் தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கமண்டலத்து நீரை எடுத்தபோது, அதைத் தடுக்கும் நோக்கத்தில் வண்டு உருவமெடுத்து கமண்டலத்தின் வாயை அடைத்துக் கொண்டார் சுக்ராச்சாரியார்.
இதை கண்ணுற்ற திருமால், தர்ப்பைப்புல் கொண்டு கமண்டலத்தின் வாயைக் கிளறினார். இதனால் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை போய்விட்டது. இழந்த பார்வையை மீண்டும் பெற, இத்தலத்தில் சிவனை நோக்கி சுக்ராச்சாரியார் தவமிருந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சுக்ரனுக்கு 'வெள்ளி' என்ற பெயரும் உண்டு. வெள்ளி வழிபட்ட இறைவன் என்பதால், இவ்விறைவன் வெள்ளீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
இது சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.