முன்பு, கள்ளழகரை வைகை ஆற்றில் இறக்குவதற்காக, தேனூரிலுள்ள நெற்கதிர்கால் மண்டபத்தில் வைத்தபோது, மண்டபம் தீப்பிடித்து எரிந்தது. வீரராகவப் பெருமாள் கோவிலின் பட்டாச்சார்யரான அமுதார் என்பவர், தீயில் குதித்து கள்ளழகரைக் காப்பாற்றி மணலில் வைத்துவிட்டு, மூர்ச்சையானார்.
இதைக் கண்ணுற்ற அரசன், பட்டாச்சார்யாரை மெச்சி முதல் மரியாதை செய்ய தீர்மானித்தான். பட்டாச்சார்யார் அதற்கு உடன்படாமல், தான் தினமும் பூஜிக்கும் வீரராகவப் பெருமாளுக்கு, முதல் மரியாதை தருமாறு வேண்டினார்.
அவர் கோரியபடி வீரராகவப் பெருமாளுக்கே முதல் மரியாதை தரப்பட்டது. பின்னர் மதுரை வைகை ஆற்றுக்கு மாற்றப்பட்ட பின்னரும் இந்த சம்பிரதாயம் தொடர்கிறது.
தங்கக் குதிரையில் கள்ளழகர் இறங்க வரும் முன், வெள்ளிக் குதிரையில் வீரராகவப் பெருமாள் ஒய்யாளி நடை பயில்வார். (முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு)
கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் அவரை வலம் வருவார். பின்னர் கள்ளழகர் சார்பாக பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்வார்கள்.