'வேதி' என்றால் பிரம்மன். பிரம்மன் வழிபட்டதால் இவ்வு+ர் 'வேதிகுடி' எனப் பெயர் கொண்டது. வேதங்கள் வழிபட்டதாலும் இப்பெயர் வந்ததாக கூறுவர். அசுரர்களால் களவாடப்பட்டதால் கொண்ட தோஷங்கள் நீங்க வேதங்கள் இத்தலத்தில் இவ்விறைவனை வழிபட்டன. இதன் காரணமாகவே இறைவனுக்கு 'வேதபுரீஸ்வரர்' என்ற திருநாமம் வந்தது. சுவாமி வாழை மடுவில் இருந்து தோன்றியதால் 'வாழை மடு நாதர்' என்ற பெயரைக் கொண்டார்.
அம்பாள் மங்கையர்க்கரசியின் அருளால் அரசகுமாரிக்கு திருமணம் நடைபெற்றதால், 'மங்கையர்க்கரசி' என்ற பெயரை மகளுக்கு சூட்டினானாம் இவ்வு+ர் அரசன்.
சப்த ஸ்தான ஸ்தலங்களுள் நான்காவது ஸ்தலம்.
ஜாதகத்தில் 7வது இடம் - களத்ர தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலான "நீறுவரி" எனத் தொடங்கி, "உன்னி இரு போதும்...", "வேதிகுடியே" என முடியும் பாடலை பாராயணம் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும் என்பர். திருமணம் தடைப்பட்டவர்கள் ஆணோ/பெண்ணோ இவ்விறைவனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.