நரசிங்கப் பெருமான் சாந்தமாக காட்சி தர வேண்டுமென பிரார்த்தித்த பிரஹ்லாதனனின் வேண்டுகோளுக்கிணங்க, திருநாராயணபுரம் வந்து தவம் செய்த பிரஹ்லாதனுக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். இத்தலத்திற்கு பிரஹ்லாத க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு.
சிலர் இக்கோவிலுக்கு தீயிட்டபோது, திருநரையூர் அரையர் தன் குடும்பத்தோடு உயிர் நீத்து இப்பெருமாளை காத்ததாக கூறப்படுகிறது.