அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (கருந்தட்டாங்குடி - தஞ்சை)

Primary Deity
வசிஷ்டேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

கரிகாலப் பெருவளத்தான் எனும் சோழ மன்னன் வேட்டையாடச் சென்றபோது, வேங்கை ஒன்று துரத்தி வந்ததால், வேங்கைக்குப் பயந்து அருகிலிருந்த குளத்தில் குதித்து மறைந்து கொண்டான். சற்று நேரம் கழித்துப் பார்த்ததில், வேங்கை கருவேல மரத்தடியில் மறைந்து - அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று சுயம்புவாகத் தோன்றக் கண்டான்.

கரிகாலன் புலிக்குப் பயந்து விழுந்த குளத்து நீர், அவனது கருங்குஷ்ட நோயைக் குணமாக்கியது. இதனால் மகிழ்வுற்ற கரிகாலன் இவ்வாலயத்தை ஸ்தாபித்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

இதனால் ஸ்வாமிக்கு கருணாகரஸ்வாமி என்ற பெயர் வந்தது. இக்குளத்தில் நீராடி ஒரு மண்டலம் இவ்விறைவனை வழிபடுவோர்க்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும் என்பர்.

எண்ணற்ற செப்புத்தகடுகள் கிடைத்த ஸ்தலம்.

வைகாசியில் பிரம்மோத்ஸவம். பல்லக்கும், தேர் பவனியும் அவசியம் காண வேண்டியது என்பார்கள்.

தேவார வைப்புத்தலம்.

மூலவர்: வசிஷ்டேஸ்வரர்் அம்பாள்: பெரியநாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான வசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இவருக்கு கருவேலநாதர், கருணாகரஸ்வாமி ஆகிய பெயர்களும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.

தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வழக்கத்திற்கு மாறாக தேவியின் வடிவம் வலப்பக்கமாக உள்ளது.

கோஷ்ட மூர்த்தங்களுள் அர்த்தநாரீஸ்வரரின் திருவுருவம் வித்தியாசமான அழகுடன் இருக்கின்றது.

மகிஷாசூரமர்த்தினியாக எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் அருள் வடிவம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் வகையிலுள்ளது. தட்சிணாமூர்த்திக்கு பக்கத்தில் வசிஷ்டரின் திருவுருவம் காணலாம்.

வசிஷ்டர் மற்றும் அருந்ததியின் மூல விக்ரகங்களும் (கல்), உற்சவ விக்ரகங்களும் (உலோகம்) இங்கு தரிசிக்கலாம்.

தற்போது கருணாசுவாமி ஆலயம் என்றழைக்கப்படுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...