ஸ்தல வரலாறு:
காகபுஜண்டர் - வகுளா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து, பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், மகரிஷியாகவும் வாழ்ந்த ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம்.
பிரம்மா அரணிக்கட்டையை கடைந்தபோது தோன்றிய அரணி நதிக்கரையில், கிருஷ்ணர் அஸ்வத்த மரமாக நிற்கிறார். அந்த இடத்தை தேர்ந்தெடுத்து, தவம் செய்யலானார் ரோமச மகரிஷி. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பிரத்யட்சமானார். தனக்கென்று வரம் ஏதும் கேளாமல், இத்தலத்தில்...
அத்ரி முனிவரின் புத்ரனான முகுந்த முனிவரும் இத்தலத்தில் தவம் புரிந்தார். அரணி நதிக்கரையில்...
கால பைரவர் வடிவில் பிரத்யட்சமாகி தரிசனம் தந்த இவரை வழிபடுவோரை காலனின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டினார் முகுந்த முனிவர்.
ஆயுளுடன் வாழ வழி காட்டும் அரன் உறையும் ஸ்தலம் என்பதால், அரியதுறை எனப் பெயர் கொண்டதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.