மூலவர்: வரதராஜப்பெருமாள், தாயார்: புஷ்பவல்லி.
மூலஸ்தானத்தில் வரதராஜப்பெருமாள், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். சூரிய பிரபை கொண்டுள்ளார். ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
திருக்கச்சி நம்பிகளுக்கு சேவை சாதித்த மாதிரியே, சேவார்த்திகளுக்கும் சேவை சாதிக்கின்றார்.
உற்சவர் தேவராஜப் பெருமாள் திருவுருவம் அழகாக இருக்கிறது. ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
21ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு காலை ஆறரை மணிக்குள் சூரிய பூஜை நிகழும்.
தாயார் புஷ்பவல்லி மிகுந்த வரப்பிரசாதி.
பிரகார வலச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக ஸ்ரீநிவாசப் பெருமாள், மண்டியிட்டு அமர்ந்த ஆஞ்சநேயர், கிடந்த கோலத்தில் ரங்கநாதர், கருடாழ்வார், கண்ணன் ஆகியோரை சேவிக்கலாம்.
ஒய்யாளி மண்டபத்தில் தசாவதார சித்திரங்கள் அழகாக இருக்கின்றன.