அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (திருமங்கைசேரி)

Primary Deity
வரதராஜப் பெருமாள்
Temple Type
வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

புற்றிலுள்ள சர்ப்பம், நாராயணரை சேவித்துவிட்டு இரை தேடுவது வழக்கம். வயதாகி மூப்பினால் தள்ளாடும் நிலையிலும் மனதார நாராயணரை தியானித்தது. பிரத்யட்சமான பெருமாள் மோட்சத்தைக் கொடுத்தார் என ஸ்தல வரலாறு. வரதராஜபுரம் என்றிருந்த இவ்வூர் திருவெள்ளியங்குடியிலிருந்து திருஇந்தளூர் செல்லும் பாதையிலுள்ளது. திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் ஓர் இரவு தங்கினார் என்பதனால் திருமங்கைசேரி எனப் பெயர் கொண்டதாகக் கூறுகின்றனர்.

மூலஸ்தானத்தில் மூலவராக வரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். உற்சவ மூர்த்தி வரதராஜர் - ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதம் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் தாயார் எழுந்தருளியுள்ளார். விசேஷ மூர்த்தியான பால ஆஞ்சநேயரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. தெற்கு பிரகாரத்தில் புன்னாக வரதர் பாம்பு புற்றுடன் காணப்படுகிறார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...