நரசிங்கரை ஆராதன மூர்த்தியாகக் கொண்டு ஆதியில் சிறிய கோவிலாக இருந்ததாம். நாளடைவில் பெரியதாக வளர்ந்து பல்வேறு மூர்த்தங்களுடன் திகழ்கிறது என கூறுகின்றனர். தற்போது நரசிங்கரின் திருவுருவம் வெங்கடாசலபதியின் பின்புறம் உள்ளது. ஆதி மூர்த்தி தாருவால் (மரத்தால்) உருவானவர். திருவஹிந்திரபுரத்து பெருமாளின் அபிமான ஸ்தலம் என கூறுகின்றனர்.
இங்குள்ள சந்திர புஷ்கரிணி தீர்த்தம் 82 ஊற்றுக்களுடன் உள்ளது. கந்தக தீர்த்தம் என்பதால் பச்சை நிறமாக இருக்கின்றது.