அருள்மிகு வண்புருஷோத்தமர் திருக்கோவில் (வண்புருஷோத்தமம்)

Primary Deity
மூலவர்: புருஷோத்தமர், உற்சவர்: புருஷோத்தமர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

உபமன்யுவிற்கும் வியாக்ரபாதருக்கும் அருளும் விதமாக பிரத்யட்சமான பெருமாள், அதே நிலையில் நமக்கும் சேவை சாதிக்கிறார்.

வியாக்ரபாதர் மலர்களைப் பறித்து மாலை தொடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தபோது, அவரது குழந்தை உபமன்யு அழுதது. அழுத குழந்தைக்குப் பாலூட்ட திருப்பாற்கடலையே வரவழைத்ததாக ஐதீகம்.

இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, நாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று, ஏகாதச ருத்ர பீடங்களுள் பவ பீடம்.

மூலவர்: சுந்தரேஸ்வரர்

11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு: சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்கொள்ளாமல் செருக்குடன், யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.

நடந்தவைகள் அனைத்தையும் அறிந்துகொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர்.

11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கிறார் என ஸ்தல வரலாறு.

ஸ்ரீ வண் புருஷோத்தமம், ஸ்ரீ வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திரு அரிமேய விண்ணகரம் ஆகிய திவ்ய தேசங்களில் மணவாள மாமுனிகள் மங்களாசாஸன உற்சவத்திற்கு எழுந்தருளுகிறார்.

மூலவர்: புருஷோத்தமர், உற்சவர்: புருஷோத்தமர், தாயார்: புருஷோத்தம நாயகி.

மூலஸ்தானத்தில் புருஷோத்தமப் பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஸ்ரீதேவியும் பூதேவியும் உடன் உள்ளனர்.

உற்சவ மூர்த்தியான புருஷோத்தமர் பேரெழிலுடன் விளங்கும் விக்ரஹம்.

தாயார் புருஷோத்தம நாயகி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

அயோத்தியின் நாயகன் ஸ்ரீ ராமனே இங்கு உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதாகக் கருதி ஆனந்தமடைகின்றனர்.

ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். கைகட்டி வாய் பொத்தி தாசானுபாவத்தில் காணப்படும் ஆஞ்சநேயரின் திருவுருவம் அழகாக இருக்கிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...