ஆரவல்லிக் கோட்டையை ஆண்டு வந்த ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி உள்ளிட்ட ஏழு சகோதரிகளும் மந்திர தந்திரங்களால் மக்களை கொடுமைப்படுத்தி வந்தனர். பஞ்சபாண்டவர்களின் தங்கை மகனான அல்லிமுத்து இந்த வனபத்ரகாளியை வழிபட்டு, வரம் பெற்று, அவர்களின் கொட்டத்தை அடக்கி, வென்றான் என வரலாறு. இந்த கோவிலுக்கு அருகில் மேற்கு திசையில் பகாசூரன் மலை - பகாசூரன் கோட்டை ஆகியன உள்ளன. இங்குள்ள மக்களை கொடுமைப்படுத்தி வந்த பகாசூரனை பீமன் எதிர்கொண்டு சண்டையிட்டு அழித்தான். பீமன் இக்காளியிடம் பெற்ற வரம் துணை நின்றது என வரலாறு. பகாசூரன் இறக்கும் தருவாயில் காளியை வேண்டி காவல் பூதமாகும் தகுதியை பெற்றான்.
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் (மேட்டுப்பாளையம்)
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
வேலூர்
Contact Number
+91-Not Available
கோவிலின் முன்பாக பகாசூரன் - பீமன் என இரண்டு காவல் பூதங்கள், மிகப் பெரிய உருவங்களாக இடம் பெற்று உள்ளனர். கிழக்கு நோக்கிய சந்நிதியில் முனியப்பன் எழுந்தருளி உள்ளார். மேற்கில் ஓடும் பவானி ஆற்றில் குளித்து விட்டு கரையோரமாக எழுந்தருளியுள்ள முத்தமிழ் விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று அம்மன் சந்நிதிக்கு செல்கின்றனர். மூலஸ்தானத்தில் மூலவர் லிங்க வடிவிலும், அன்னை பத்ரகாளி நின்ற திருக்கோலத்திலும் தரிசனம் தருகின்றனர். நெல்லீஸ்வரர் உடனாய காந்திமதி அம்மனையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.