ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தபின், சிரம பரிகாரம் செய்யும் நிலையில் ஸ்ரீ ராமர் இங்கு சயனித்திருப்பதாக ஐதீகம்.
ஜடாயுவிற்கு இறுதிக்கடன் செய்த ராமர், சீதாதேவி பக்கத்தில் இல்லையே என வருந்தியதால் உதவ வந்தாள் பூமா தேவி. 'புள்' என்றால் பறவை (ஜடாயு). அதன் பூத உடலுக்கு இறுதிக்கடன் செய்ததால் இவ்வுரை புள்ளம்பூதங்குடி என அழைக்கின்றனர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - சப்த ராம க்ஷேத்ரங்களுள் ஒன்று.