வாலி வழிபட்ட இறைவன் என்பதால் வாலீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இத்தலத்தில் தவம் மேற்கொண்ட வாலி, தன்னுடன் போர் புரியும் எதிரிகளின் பலத்தில் பாதி தன்னைச் சேர வேண்டுமென (வரம் பெற்றார்).
பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இவ்விறைவனை வழிபட்டுப் பூஜித்துள்ளனர்.
இலுப்பை எண்ணெய் கலந்த நெய் அபிஷேகம் சிவபெருமானுக்குச் செய்கின்றனர். மக்கட்பேறு வேண்டுவோர்க்குக் கைமேல் பலன் கிடைப்பதாகக் கூறுகின்றனர். பாலதண்டாயுதபாணிக்கு பங்குனி உத்திர விழா பிரசித்தம்.