பூமி தேவியை திருமால் மணந்ததால் கோபம் கொண்ட திருமகள், திருமாலைப் பிரிந்து, பூலோகம் வந்து இங்குள்ள ஷண்பகாரண்யத்தில், சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டாள். சிவபெருமானின் முயற்சியால் பூமி தேவியுடன் இங்கு வந்த திருமால், ஸ்ரீ தேவியுடன் மீண்டும் இணைந்தார். அவர்களது திருமணக் கோலத்தை சிவபெருமானும் பார்வதியும் கண்டு மகிழ்ந்தனர் என ஸ்தல வரலாறு.
பெண் யானையைக் காணாது தேடி வந்த ஆண் யானை ஒன்று இங்குள்ள புற்றை சிதைக்க முற்பட்டது. புற்றிலிருந்து புறப்பட்ட யானையும், யானையைக் கொன்ற பாவங்கள் நீங்க வேண்டி சிவபெருமானை வழிபட்டது என ஸ்தல வரலாறு.
இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் இருக்கின்றன. சிவபெருமானின் இடக்கண்ணாக பாவிக்கப்படும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ஊருக்கு வடக்கேயும், வலக் கண்ணாக பாவிக்கப்படும் விஸ்வநாதர் ஆலயம் ஊருக்கு தெற்கேயும், நெற்றிக்கண்ணாகத் திகழும் வைகல்நாதர் ஆலயம் ஊருக்கு மேற்கேயும் அமைந்துள்ளன.
தேவாரத்திருத்தலம்.