ஆடு மேய்க்கும் ஊமைச் சிறுவன் ஒருவனின் முன்பாக பெரியவர் தோற்றத்தில் வந்த பெருமாள் அவனது தலை மீது கை வைத்து ஆசீர்வதிக்கிறார். அந்தச் சிறுவன் ஊர் மக்களிடம் போய் பெரியவர் ஒருவர் வந்துள்ளதாகக் கூறினான். ஊமைக்கு பேசும் சக்தி வந்தது கண்டு வியந்த ஊர் மக்கள், மலை மேல் வந்து பார்த்தால் சங்கு சக்கரதாரியாகப் பெருமாள் சிலையாக நிற்பது கண்டு அவருக்குக் கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் என்பது ஸ்தல வரலாறு.
அருள்மிகு உத்தமராயப் பெருமாள் திருக்கோவில் (பெரிய அய்யம்பாளையம்)
Primary Deity
உத்தமராயப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
மதுரை
Contact Number
+91-Not Available
சிறு குன்றின் மீதுள்ள பழமையான ஆலயம். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 350 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தில் மூலவராக உத்தமராயப் பெருமாள் கிழக்கே திருமுகமாய் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தாயாருக்கென தனி சந்நிதி இல்லை. விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.