பல வணிகர்கள் கூடும் திருமுனைப்பாடி சந்தைக்கு மிளகு மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு வியாபாரியை, வழிமறித்த முதியவர் ஒருவர், தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாகவும், சிறிது மிளகை கொடுத்தால் நெற்றியில் பற்று போட்டுக் கொள்வதாகவும் கூறினார்.
"இவைகளெல்லாம் உளுந்து மூட்டைகள், என்னிடத்தில் மிளகு ஒன்றுமில்லை," என பொய்யுரைத்தான் வியாபாரி.
சந்தைக்குப் போனதும், வியாபாரம் செய்வதற்காக மிளகு மூட்டைகளை அவிழ்த்தான். ஆனால், அவை அனைத்தும் உளுந்து மூட்டைகளாக இருந்தன. பயந்துபோய், முதியவரை சந்தித்த இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தால், அங்கு ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்ததாம். தான் செய்த பிழைக்கு மன்னிப்பு வேண்டினான்.
உளுந்தெல்லாம் பழையபடி மிளகாக மாறின. இந்த அதிசயங்களை நிகழ்த்தியவர் என்பதால் இவ்விறைவனுக்கு உளுந்தாண்டவர் என்று பெயர் வந்தது.