திருமங்கை மன்னன் பிறந்த குறையலூரின் அருகே தேவராஜபுரம் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு கொள்ளிடக் கால்வாயும், அதனருகே மண்டபமும், மண்டபத்தினருகே அரச மரமும் உள்ளன. இந்த இடத்தில்தான் திருமங்கை ஆழ்வார் வழிப்பறி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனருகேயுள்ள திருமணங் கொல்லை எனும் ஊரிலும் வழிப்பறி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தை அமாவாசையன்று, திருநகரியிலிருந்து புறப்பட்டு குறையலூர், மங்கை மடம், நாங்கூர் ஆகிய ஸ்தலங்களை மங்களாசாஸனம் செய்வார். திருமங்கை ஆழ்வார் நாங்கூரின் பஞ்சநரசிம்ம க்ஷேத்ரங்களையும் பூஜித்து வழிபட்டுள்ளார். இத்தலம் நாங்கூர் பஞ்ச நரசிம்ம ஸ்தலங்களுள் ஒன்றாகும்.