பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் மேற்கொண்ட அர்ச்சுணன், வேடுவன் உருவில் வந்திருப்பது சிவபெருமான் என அறியாமல் அவரது தலையில் வில்லால் அடித்ததால், இறைவனின் திருமுடி மீது தழும்பு ஒன்று காணப்படுகிறது.
காடாக இருந்த இப்பகுதியை சீராக்கி ஊரை விரிவுபடுத்த முற்பட்ட நவாப்பின் ஆட்கள், கோடரியால் மரங்களை வெட்டியபோது, கோடரி அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது பட்டுவிட்டதாம். இதை பார்த்துக் கொண்டிருந்த நவாப்பின் மந்திரி, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார் என வரலாறு கூறுகிறது. இந்த லிங்கத்தை கண்டெடுத்தவர் ஒரு முகம்மதியர். நவாப் வம்சத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு குடும்பம், அர்த்தஜாம பூஜை நைவேத்தியத்திற்கு பசும்பால் அனுப்பி வைப்பதாக குறிப்பொன்று கூறுகிறது.
இது தேவார வைப்புத்தலம் மற்றும் அஷ்ட ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.