பார்வதி தேவி மாங்காட்டில் தவமிருக்கையில், தவத்தீயின் உக்கிரம் எங்கும் வெப்பத்தைப் பரப்பியது. வெப்பத்தின் உஷ்ணம் தாளாமல் உயிர்கள் தவித்தன. விஷ்ணுவின் யோசனைப்படி மஹாலட்சுமி இங்கு பசு வடிவம் கொண்டு கோபுரி எனப் பெயர் கொண்டு, பின் நாளடைவில் மருவி கோவூர் என்றானது.
மஹாலட்சுமி இவ்விறைவனை வழிபட்ட ஸ்தலமாதலால், ஸ்தல விருட்சமான மகா வில்வ மரத்தில் 5, 6, 7, 9 தளங்கள் கொண்ட இலைகள் உள்ளன. அதாவது 27 இலை அடுக்குகள்.
சேக்கிழார் பெரிய புராணம் எழுதத் தொடங்கிய ஸ்தலம். தியாகபிரம்மம் இவ்விறைவனைப் பற்றி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களுள் புதன் ஸ்தலம், தேவார வைப்புத் தலம்.