காந்திமதி எனும் சிவபக்தை, உறையூரிலிருந்து திருச்சிக்கு தினமும் நடந்தே சென்று தாயுமானவ சுவாமியை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டவள். அவள் கர்ப்பிணியான நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு, மலர்த்தோட்டம் ஒன்றில் அமர்ந்து தாயுமானவரை வேண்டுகிறாள்.
அவளது நிலைக்கு இரங்கிய இறைவன் அவள் இருக்கும் இடத்திலேயே சுயம்புவாகத் தோன்றி, அவள் வழிபட வழி வகுத்து, சுகப்பிரசவத்திற்கும் அருளினார். அந்த செவ்வந்தித் தோட்டத்திலேயே இறைவனுக்குக் கோவில் எழுப்பினான் சூரவாதித்த சோழன்.
சுமங்கலிகளும் கர்ப்பிணிகளும் வழிபட்டு நற்பலன்களை அடைகின்றனர்.