அருள்மிகு ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (அழகாப்புத்தூர்)

Primary Deity
ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

இவ்வூரில் பிறந்த புகழ்த்துணை நாயனார், இறைப்பணி செய்து வந்தார். இவ்வூரில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக வறுமையில் உழன்று பசியால் வாடலானார். முதுமை, தள்ளாமை இவற்றால் வேறு அல்லல்பட்டார். இருப்பினும் தான் செய்து வந்த தொண்டினை விடாது செய்து வந்தார்.

ஒரு நாள் குடத்தில் நீர் எடுத்து வரும்போது மயக்கம் வந்தது. அதை பொருட்படுத்தாமல் குடத்தைத் தூக்கியதும், குடம் நழுவி ஸ்வாமியின் திருமுடியின் மீது விழுந்தது. இதனால் ஸ்வாமியின் சிரசில் தழும்பு உண்டானது.

"சிவபெருமானுக்கு அபச்சாரம் செய்து விட்டேனே" என கதறிக்கொண்டு மூர்ச்சையானார். அன்றிரவு நாயனாரின் கனவில் தோன்றிய சிவபெருமான், பஞ்சம் நீங்கும் வரை இவரது வறுமையைப் போக்க தினமும் ஒரு பொற்காசை பீடத்துப் படியில் வைப்பதாகக் கூறினார். அவ்வாறே தினமும் ஒரு பொற்காசு தந்ததால், ஸ்வாமிக்கு படிக்காசு நாதர் என்ற பெயர் வந்தது. புகழ்த்துணை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி பெற்ற ஸ்தலம் இது.

கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் இதுவும் ஒன்று. 2000 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்பார்கள்.

புகழ்த்துணை நாயனாரின் வாரிசுகளே தற்போது அர்ச்சகராக இருக்கின்றனர் என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

இது ஒரு தேவாரத்திருத்தலம்.

மூலவர்: ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர், அம்பாள்: அழகம்மை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்வர்ணபுரீஸ்வரர். லிங்கத்தின் சிரசின் மீது ஒரு தழும்பு காணப்படுகிறது. இவருக்கு படிக்காசு நாதர் என்ற பெயரும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் அழகம்மை, தன் பெயருக்கேற்ற திருவுருவம் கொண்டு தரிசனம் தருகின்றாள். அபய ஹஸ்தம், ஊரு ஹஸ்தம், ருத்ராட்ச மாலை கொண்டு காட்சி தருகின்றாள். சௌந்தர நாயகி என்றொரு பெயரும் உண்டு.

சிறப்பு மூர்த்தமாக இங்கு எழுந்தருளியிருக்கும் ஷண்முகர் எழிலான திருவுருவம் கொண்டவர். வேல் கொண்ட திருக்கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தி, பன்னிரு திருக்கரங்களுடன் தரிசனம் தருகின்றார். ஓம் எனும் பிரணவ எழுத்தின் கீழ் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ தத்துவ நிதியின்படி உருவான விக்ரஹம் எனக் கூறுகின்றனர். விஷக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேஷ ஷண்முக அர்ச்சனை செய்கின்றனர்.

வினை தீர்க்கும் சொர்ண விநாயகர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரே ஸ்தல விநாயகர். கஜலட்சுமி, பைரவர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் மனைவியுடன் காணப்படும் புகழ்த்துணை நாயனார் திருவுருவமும், பறவை நாச்சியருடன் காணப்படும் சுந்தரரின் திருவுருவமும் அழகாக இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...