பார்வதி தேவியுடன் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சிவபெருமான், இத்தலத்தின் இயற்கை அழகை
கண்ணுற்று, பு+மியில் இறங்கினார். தனது சூலத்தை பு+மியில் ஊன்றினார். பு+மியிலிருந்து நீர் பெருகி ஓடி வந்தது. ்
இதுவே சூலகங்கை எனப்படுகிறது. அதனருகே ஒரு வன்னி மரம் தோன்றியது. அதனடியே சுயம்புவாக லிங்கத் ்
திருமேனி ஒன்று தோன்றியது.
இதனைக் கண்டு மகிழ்ந்த உமையவள் சூலகங்கை நீரை எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தாள். தனது ்
பொன் ஆபரணங்களை லிங்கத்திற்கு அணிவித்து அலங்கரித்து அழகு பார்த்தாள்.. பொன் ஆபரணங்களால் ்
பிரகாசித்த லிங்கத்திருமேனி என்பதால் செம்பொன்நாதர் எனும் பெயர் கொண்டார்.
இந்த சுயம்பு லிங்கத்தை பு+ஜித்து சந்தோஷம் அடைந்த உரோமச முனிவர் தேவதச்சனை  ்அழைத்து இங்கு ்
கோவில் கட்ட பணித்தார் என ஸ்தல வரலாறு.
காவிரி ஆற்றை இரண்டாகப் பிரித்து வடக்கு - தெற்காக ஓடி வரச் செய்தார் அகஸ்தியர் பெருமான். ்
வடக்குபுறமாக காவிரி கடு வேகமாக ஓடி வந்ததால் கடுவாய் எனப் பெயர் கொண்டது. ்
(தற்போது குடமுருட்டி எனப்படுகிறது) இவ்வு+ர் புதிய ஊராக தோற்றமளித்த காரணத்தால் புத்தூர் எனும் ்
பெயர்சேர்ந்து கொண்டு கடுவாய்க்கரை புத்தூர் என்றானது. எனினும் தற்போது ஆண்டான்கோவில் ்
என்றே அழைக்கின்றனர்.
ஆறு மாத தூக்கமும், ஆறு மாதம் தூக்கத்திலிருந்து விழிப்பும் என்ற சாபத்தை ப்ரம்மனிடமிருந்து பெற்ற ்
கும்பகர்ணன் விழித்திருக்கும் போதெல்லாம் அனைவரையும் துண்புறுத்தும் வழக்கத்திலிருந்தான். அவனால் ்
இம்சிக்கப்பட்டவர்கள் ஸ்வர்ணாம்பிகையை சரண் அடைந்தனர். அன்னையின் கட்டளைப்படி கும்பர்ணனை ்
தனது தும்பிக்கையால் தூக்கி வீசி எறிந்தார் விநாயகர். இலங்கையில் போய் விழுந்தான் அவன். இதனால் ்
இத்தலத்து விநாயகருக்கு கும்பகர்ண கணபதி எனப் பெயர் வந்தது.
முசுகுந்த சக்ரவர்த்தியிடம்் அமைச்சராக பணியாற்றிய கண்டத் தேவன் என்பவன் இவ்வாலயத்து இறைவனிடம் ்
தீராத பக்தி கொண்டவன். முசுகுந்தனின் விரோதம் கொண்டதால் கண்டத் தேவனின் தலை வெட்டப்பட்டது. ்
வெட்டுண்ட தலை இறைவன் சந்நிதியை நோக்கி ஓடி வந்தது. வழியிலிருந்த நந்தி விலகி ஒதுங்கி நின்றது. ்
சிவபெருமான் கண்டதேவனுக்கு முக்தி அளித்தார். இன்றும் நந்தி விலகியபடியே உள்ளது.
இறைவனே விருப்பப்பட்டு இத்தலத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்தார் என்ற சிறப்பினை கொண்டது. அஷ்டதிக் ்
பாலகர்கள் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கியுள்ளனர்.
தேவார திருத்தலம்