ஒழுக்கமின்றி தகாத செயல்களில் ஈடுபட்டதால், இறைவன் பெருமழையையும் வெள்ளத்தையும் உண்டாக்கினார். மக்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் வெள்ளத்தில் அழிந்தன.
தவறை உணர்ந்து திருந்தி, இறைவனை வழிபட்டு மன்னிப்பு கோரினர். அணை கட்டும் அளவிற்கு நெற்குவியலை தந்துதவினார் இறைவன். அப்போது அந்தணர் ஒருவர் வந்து மண்குடங்களைக் கொடுத்துச் சென்றார். அவர் சென்றதும் மண்குடங்கள் அனைத்தும் பொன்குடங்களாக மாறின. அந்தணராக வந்தவர் இறைவன் வெண்ணையப்பரே என்பதை மக்கள் உணர்ந்து நல்வழியில் இறைவனை வழிபட்டனர். இதனால் இவ்வூருக்கு "நெல்லணை" எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் "நெய்வெணை" என்றானது.
சனகாதி முனிவர்கள் வெண்ணையப்பரை வழிபட்டு, பரம்பொருளின் தத்துவத்தை உணர்ந்தனர். ஞானசம்பந்தரின் வாக்குப்படி, இவ்விறைவனை வழிபடுபவர்கள் வறுமை நீங்கப்பெற்று புகழோடு வாழ்வார்கள்.