கார்ஷணாஜினி எனும் முனிவர் உலகிலுள்ள எல்லா லிங்க மூர்த்தங்களின் திருநாமங்களைச் சொல்லி வழிபட விரும்பி இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். ஆலயத்து சுவரில் எல்லா லிங்கங்களின் பெயர்களும் அவர் கண்ணுக்குத் தெரியும்படி இறைவன் வரமளித்தார். எல்லா பெயர்களின் இருப்பிடமாக விளங்கியதால் பேர் - அளம் - பேரளம் என்றானது. எல்லா ஸ்தலங்களுடைய அருள்தன்மை இங்கு இருப்பதால் இவ்வூரை சமஷ்டி க்ஷேத்ரம் என்று கூறுவர்.
ஒரு முறத்தில் திருநீற்றைத் தெளித்து நாமாஸ்திகேசன் என்று எழுதி, கேதார் எனும் மந்திரத்தை ஜபித்து நோயாளிகளுக்கு அளித்தால் நல்ல பலன் கிடைப்பதாக கூறுகின்றனர்.