அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோவில் (திருச்சிறுகுடி)

Primary Deity
மூலவர்: மங்களநாதர்் உற்சவர்: சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

ஸ்தல வரலாறு: திருக்கயிலையில் பார்வதி-பரமேஸ்வரன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில் பார்வதி ஜெயித்து விடவே, சிவபெருமான் சூட்சுமமாக மறைந்து விட்டார். மறைந்தவர் மீண்டும் இங்கு தோன்றியதால், இங்கு வந்த பார்வதி மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, இறைவனைத் தன் கையால் வெளிப்படச் செய்ய, இறைவன் அம்பாளை ஏற்றுக்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சிறுபிடி என முதலில் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது சிறுகுடி என அழைக்கப்படுகிறது. கருடன், அங்காரகன், கந்தர்வர்கள் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம் இது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், திருமணத்தடை உள்ள கன்னியர்களும் வழிபட்டு நலன் பெறுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மங்களநாதர் எனப்படும் சூட்சுமபுரீஸ்வரர். ஒரு பிடி அளவேயுள்ள மண்ணால் உருவான லிங்கம் மூலவராகக் காட்சி தருகின்றார். அபிஷேகம் கிடையாது. குவளை கவசம் கொண்டுள்ளார். பாணத்திற்கு சந்தனாதி தைலம், புனுகுசட்டம் சாத்துகின்றனர். சிறுகுடியீசர் என்ற பெயரும் உண்டு. கயிலையில் சிவபெருமான் சூட்சுமமாய் மறைந்து, இத்தலத்தில் எழுந்தருளியதால் சூட்சுமபுரீஸ்வரர் என்ற பெயரையும், மங்களங்களை அளிப்பதால் மங்களநாதர் என்ற பெயரையும் பெற்றார். வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வ விக்ரஹமாக சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி - அம்பாளை ஆலிங்கனம் செய்த வண்ணமும், அம்பாள் தோள் மீது கை போட்டுக் கொண்டிருக்கும் தோற்றமும் கொண்ட அழகிய உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். மஹாமண்டபத்தின் வடக்குபுறமாக தனி சந்நிதி கொண்டுள்ளார் அம்பிகை மங்கள நாயகி. அழகே உருவாக எழுந்தருளியுள்ள இவர் மிகுந்த வரப்பிரசாதி என்பர். மங்கள தீர்த்தம் உண்டாக்கியவள். இங்கு அம்பாளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. கன்னி மூலையில் ஸ்தல விநாயகரான மங்கள விநாயகரை தரிசிக்கலாம். சிறுகுடியில் எல்லா பெயர்களுமே மங்களகரமாகத்தான் இருக்கின்றது. சிவலாய கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றனர். அவற்றுள் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் அற்புதமானது. நடன கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், விஸ்வாமித்ரர் ஆதி விநாயகர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், ஞான சம்பந்தர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...