நித்ய பிரதோஷம் எனும் சிவபெருமானின் புண்ணிய காலம் மாலை வேளைகளில் இருப்பதாலும், அப்போதுதான் அஸ்தமிக்கும் நேரம் வந்து விடுவதாலும், தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடிவதில்லையே என்று வருத்தம் கொண்ட சூரியன், பிரதோஷத்தைக் காண ஏங்கினான்.
தனது சீடனான யாக்ஞவல்கியரிடம் தனது கவலையை எடுத்துச் சொன்னான் சூரியன். தனது குருவின் கவலையைப் போக்க எண்ணிய யாக்ஞவல்கியர், வேதாக்னி யோக பாஸ்கர சக்கரம் ஒன்றை பொறித்து இறைவனின் பாதங்களில் சமர்ப்பித்தார். மது மாமந்திர சக்தி என்பர். இந்த சக்திகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இலுப்பை மரமாக வளர்ந்தது. (மதூ என்றால் இலுப்பை).
பிரதோஷ வேளையில் இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றுவார் யாக்ஞவல்கியர். பிரதோஷ புண்ணியம் இந்த விளக்குகளில் படிந்து விடும். மறுநாள் காலை சூரியன் இந்த புண்ணியங்களை கிரகித்துக் கொள்வார்.
இங்குள்ள சூரியகோடி பிரகாச சிவலிங்க மூர்த்தி கண் நோய்கள் அகலவும், தீர்க்கமான கண் பார்வை பெறவும், புத்ர பாக்யம் பெறவும், சந்ததியினரின் ஆரோக்கியம் கிடைக்கவும், குடும்ப சண்டைகள் இல்லாதிருக்கவும் வரமளிக்கின்றார். இங்கு அன்னதானம் செய்தால் பிதுர்தோஷங்கள் விலகும். இங்குள்ள மூலவருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் சூரிய தோஷம் நீங்கும்.
ஆடி பூரத்தன்று கற்பகாம்பாள், கஞ்சனூர் கோவிலிலிருந்து புறப்பட்டு துகிலி அக்ரஹாரத்து லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் முன்பாக வந்து நின்று விடுவாள். அக்ரஹாரத்து மக்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்வர். அக்ரஹாரத்து பெண்கள் அம்பிகைக்கு சீர் செய்யும் விதமே சிறப்பானது. எண்ணெய், மஞ்சள், நறுமணப்பொடி, ரவிக்கை, புடவை ஆகியன கொண்டு வந்து கொடுப்பார்கள். கற்பகாம்பாளை பிறந்த வீட்டினராய் பாவித்து சீர் செய்வார்கள். சர்க்கரைப் பொங்கல், வடை நைவேத்தியம் செய்வார்கள்.