அருள்மிகு ஸ்ரீ யாக்ஞவல்கியர் திருக்கோவில் (பல்லாவரம்)

Primary Deity
ஸ்ரீ யாக்ஞவல்கியர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

சுக்ல யஜுர் வேதத்தை பூமிக்குத் தந்தவர் ஸ்ரீ யாக்ஞவல்கியர். இவருக்கு குருவாக இருந்தவர்கள் பிரஹஸ்பதி, வைசம்பாயனர், வ்ருத்த வியாசர், சூரிய பகவான் ஆகியோர். இன்றைய இந்திய சட்டம் பெரும்பாலும் யாக்ஞவல்கியரின் ஸ்ம்ருதியை ஒட்டியே அமைந்துள்ளன. ஒரு ஆஸ்ரமம் அமைந்தது போல் இக்கோவில் இருக்கும் பகுதி மிகவும் அமைதியாக உள்ளது. கோசாலை ஒன்றும் இருக்கிறது. 10.02.2000 அன்று கும்பாபிஷேகம் நடந்தேறியது. பௌர்ணமி தினங்களில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை செய்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மற்றும் காயத்ரிக்கு ஜபங்கள், காயத்ரி ஜப தினத்தன்று சமஷ்டி காயத்ரி ஜபம் மற்றும் ஹோமம், பஞ்சாங்கம் படித்தல் மற்றும் 10வது/12வது வகுப்பு மாணவர்கள் எழுதும் பொதுத் தேர்வை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆகியன சிரத்தையாக செய்கின்றனர்.

வரிசையாக மூன்று சந்நிதிகள் கொண்டுள்ள மூலஸ்தானத்தில், முதலாவது பிரதான சந்நிதியின் மூலவராக ஸ்ரீ யாக்ஞவல்கியர் தனது இரு பத்னிகளான மைத்ரேயி மற்றும் காத்யாயினி சகிதமாக எழுந்தருளியுள்ளார். அடுத்த சந்நிதியில் ஸ்ரீ காயத்ரி மாதாவும், அதை அடுத்துள்ள சந்நிதியில் சூரிய பகவானும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...