அஞ்ஞாத வாசத்தில் இருந்த பஞ்ச பாண்டவர்களை வெளிக்கொணரவும், அவர்களது அஞ்ஞாத வாசத்தை சீர்குலைக்கவும், துரியோதனன் விராட தேசத்து பசுக்களை கவர்ந்து சென்றான். மகாலட்சுமியே துணையாக இருந்து பசுக்களை மீட்க பாண்டவர்களுக்கு உதவியதாக கூறுவர். பசுக்களை மீட்க போர் புரிந்ததால் 'திருப்போர்' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'திருப்பூர்' என்றானதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் மகாலட்சுமி, கங்காதேவி, கங்கா தீர்த்தக்கிணறு ஆகியன இருப்பதால் தீபாவளி தினத்தன்று தரிசனம் செய்வது விசேஷம் என்பர்.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில் (திருப்பூர்)
Primary Deity
ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
விருதுநகர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி எழுந்தருளியுள்ளார். இது காசி நகரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கம். அன்னை விசாலாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகான கோஷ்ட மூர்த்தங்களையும், பிரகார வலச்சுற்றில் பரிவார தேவதைகளையும் தரிசிக்கலாம். பிரகாரத்தில் கங்கை தீர்த்தக்கிணறு இருக்கின்றது. அதன் அருகாமையில் கங்கா தேவியை தரிசிக்கலாம். வரதராஜப் பெருமாள் கோவிலும் இவ்வூரிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.