அருள்மிகு ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் திருக்கோவில் (பெரணமல்லூர்)

Primary Deity
ஸ்ரீ வரத ஆஞ்சநேயர்
Temple Type
ஆஞ்சநேயர் கோவில்
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available

இரண்டு அரச படையினர் போர் செய்த இடம் என்பதால் பேரணிமல்லூர் எனப்பெயர் கொண்டு பின்னர் நாளடைவில் மருவி பெரணமல்லூர் என்றானது.

இவ்வூரை விட்டு வெளியே செல்பவர்கள், இவரை வழிபட்ட பின்னரே பயணம் மேற்கொள்வதால், இடையூறுகள் ஏதுமில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

ஆஞ்சநேயர் மார்கழி அமாவாசை தினத்தில் பிறந்ததால் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

பசுமையான வயல்களும், மலைகளும் சூழ்ந்த இயற்கையான சூழலில் அமையப் பெற்ற சிறிய குன்றின் மீது அமைந்துள்ள ஆலயம். 16 படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும்.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அபய முத்திரையுடன் வித்தியாசமான கோலத்தில் தரிசனம் தருகின்றார்.

இருகரங்களையும் கூப்பி, தாஸானு பாவத்தில், ஸ்ரீ ராமபிரானை வணங்கும் நிலையில் பிற ஆலயங்களில் தரிசனம் தரும் இவர், இங்கு தனது முகத்தை தன் இடது தோள் பக்கம் திருப்பியபடியும், வலது கண்ணால் சேவார்த்திகளை பார்த்தபடியும், அபய முத்திரையுடனும் இருப்பது அபூர்வம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...