கைலாசத்தை உலுக்கியதால் சிவபெருமானின் கோபத்திற்காளான ராவணன் இத்தலத்திற்கு வந்து சாம கானம் பாடி, இசையால் குடமாக்கி, நரம்புகளை தந்திகளாக்கி சாமகானம் இசைத்து வழிபட்டான். இதனால் இவ்வூர் 'திருகு தலையூர்' எனப் பெயர் கொண்டு நாளடைவில் மருவி 'திருத்தலையூர்' என்றானது.
இங்கு ஏற்கனவே தவம் மேற்கொண்டிருந்த சப்த ரிஷிகள், திடீரென ராவணன் இங்கு வந்தது கண்டு, பயம் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருத மரமாக மாறி நின்றனர். இங்கு ஸ்தல விருட்ச பூஜை விசேஷம் என்பர்.
துளசி செடியை தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கிழவன் தோற்றத்தில் காணப்பட்ட திருமால், ராவணனிடம் "உன்னுடைய ஆயுள்காலமான மூன்றரைக் கோடி ஆண்டில் நீ ஏற்கனவே வரமாகப் பெற்றது மூன்று கோடி ஆண்டுகளே. மீதமுள்ள அரை கோடி ஆண்டை சிவனாரிடமிருந்து வரமாகப் பெற்று வா" என்றார். ராவணனும் கடுந்தவம் மேற்கொண்டான்.
பிரத்யட்சமான சிவபெருமானிடம் தனக்கு அரைக் கோடி ஆண்டு ஆயுள் வேண்டும் எனக் தவறுதலாகக் கேட்டு வரமாகப் பெற்றான். இதனால் ஏற்கனவே வரமாகப் பெற்றிருந்த மூன்று கோடி ஆண்டுகளை இழந்தான்.
இதைக் குறிக்கும் விதமாக இத்தலத்தில் திருமால் மூன்று விரல்களை மடக்கியபடி காட்சி தருகிறார்.