மஹாராஷ்டிர மன்னன் பிரதாப்சிங், அவரது மனைவி யமுனாம்பாளுடன் சந்தானராமரை வழிபட்டு புத்ரபாக்யம் வேண்டி நின்றார். ஸ்ரீ சந்தானராமரின் அருளால் குழந்தை பாக்யம் கிடைத்தது. 1761ல் மன்னர் பிரதாப்சிங் இக்கோவிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி யமுனாம்பாள் பெயரிலேயே இத்தலம் யமுனாம்பாள்புரம் என அழைக்கப்பட்டு, பின்னர் நீடாமங்கலம் எனப் பெயர் கொண்டது. இந்தக் கோவிலில் நேர்ந்து கொண்டு புத்ர பாக்யம் பெற்றவர்கள் மரத் தொட்டிலும், வெள்ளித் தொட்டிலும் கட்டுகின்றனர். மாதாந்திர புனர்பூச நட்சத்திரத்தன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். ஆழ்வார்களின் திருநட்சத்திர நாட்களில் திருமஞ்சனம் செய்கின்றனர்.
அருள்மிகு ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி திருக்கோவில் (நீடாமங்கலம்)
Primary Deity
ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சீதா தேவி, லட்சுமணன் ஆகியோர் உடன் உள்ளனர். உற்சவத் திருமேனிகள் அனைத்தும் அற்புதமான வடிவழகுடன் காணப்படுகின்றன. ஆலிலை கண்ணன் ரூபத்தில் காட்சி தரும் சந்தான ராமரை சேவிக்க ஆனந்தமாக இருக்கின்றது. சந்தான பாக்யம் வேண்டுபவர்களுக்கு வரப்பிரசாதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.