துர்வாசரின் கோபத்திற்காளாகி சாபம் பெற்ற சண்டிகேஸ்வரர், கமல முனிவராக அவதரித்து இத்தலத்திற்கு வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். காலப்போக்கில் புற்று வளர்ந்து லிங்கத்தை மூடிவிட்டது. நந்தியம் பெருமான் இந்த புற்றை கிளரவே ரத்தம் வெளிப்பட்டது. சங்கராபரணி ஆறாக ஓடி வந்த கங்கை லிங்கத்தை புற்றிலிருந்து வெளிப்படச் செய்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சங்கராபரணி ஆற்றின் வெள்ளத்தை மங்களாம்பிகை தனது பாதங்களால் தடுத்து நிறுத்தியதாகவும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
இக்கோவில் கி.பி. 928ல் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது.